எல்லன் கவுல்டு சுவீபெல்
எல்லன் கவுல்டு சுவீபெல் Ellen Gould Zweibel | |
---|---|
பிறப்பு | திசம்பர் 20, 1952 நியுயார்க் மாநகரம், நியூயார்க் மாநிலம் |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
துறை | வானியற்பியல், மின்ம இயற்பியல் |
கல்வி | சிக்காகோ பல்கலைக்கழகம் (இளம் அறிவியல்) பிரின்சுட்டன் பல்கலைக்கழகம்]] (முனைவர்) |
ஆய்வு நெறியாளர் | ஜெரமையா பி. ப்ப்சுட்டிரிக்கர் |
விருதுகள் |
|
எல்லன் கவுல்டு சுவீபெல் (Ellen Gould Zweibel) (பிறப்பு: 20 திசம்பர் 1952, நியூடார்க் மாநகரம்[1]) ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் மின்ம இயற்பியலாளரும் ஆவார்.
இவர்1973 ஆம் ஆண்டில் எல்லன் கவுல்டு சுவீபெல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1977 ஆம் ஆண்டில் பிரின்சுடனில் இருந்து இயற்பியலில் இயெரேமியா பி. ஆசுட்ரைக்கரின் மேற்பார்வையின் கீழ் "குளிர் விண்மீன் வட்டுகளின் சமநிலை மற்றும் ஆர அலைவுகள்" என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.[2] 1977-1978 ஆம் ஆண்டின் கல்வியாண்டிற்கான மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தில் வருகை தரும் அறிஞராக சுவீபெல் இருந்தார். பின்னர் வளிமண்டல ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் உயர் ஆய்வகத்தின் சூரிய இயற்பியல் குழுவில் சேர்ந்தார்.மேலும் இவர் 1980 முதல் 2003 வரை கொலராடோ பல்களைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். இவர் இப்போது மாடிசனில் உள்ள விசுகான்சின் பல்கலைக்கழகத்தின் வானியல், இயற்பியல் துறையில் வில்லியம் எல். கிரவுழ்சார் பேராசிரியர் கட்டிலை அணிசெய்கிறார். இவர் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் ஆற்றல் துறையின் உறுப்பினரும் காந்தத் தன் ஒருங்கமைவு மையத்தின் நிறுவல் உறுப்பினரும் மேனாள் இயக்குநரும் ஆவார்.
இவர் 1991 இல் அமெரிக்க இயற்பியல் கழகத்தில் ஆய்வுறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் 2016 இல் மின்ம இயற்பியலுக்கான ஜேம்சு கிளார்க் மாக்சுவெல் பரிசைப் பெற்றார். இப்பரிசு விண்மீன்கள், பால்வெளிகள் போன்ற "வானியற்பியல் மின்ம ஊடகங்களின் இயக்கம், நிலைப்பு, ஆற்றலியல் புலங்களில் நிகழ்த்திய செறினான ஆராய்ச்சி"க்காக இவருக்கு வழங்கப்பட்டது. இவர் மின ஊடகத்தையும் பிற வானியற்பியல் நிகழ்வுகளை இணைப்பதில் முன்னோடியாகத் திகழ்கிறார். [3]இவர் சூரியன், விண்மீன்கள், பால்வெளிகள், பால்வெளிக் கொத்துகள் ஆகியவற்றின் வானியற்பியல் நிகழ்வுகளையும் மின்ம இயற்பியலையும் ஆய்வு செய்கிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ biographical information from American Men and Women of Science, Thomson Gale 2004
- ↑ கணித மரபியல் திட்டத்தில் எல்லன் கவுல்டு சுவீபெல்
- ↑ 2016 James Clerk Maxwell Prize for Plasma Physicist Recipient, Ellen G. Zweibel, citation, APS website
வெளி இணைப்புகள்
[தொகு]- Homepage, University of Wisconsin–Madison பரணிடப்பட்டது 2022-02-03 at the வந்தவழி இயந்திரம்